டி வில்லியர்ஸ் அதிரடி… சோஹல் மாய பந்து வீச்சு! முதல் வெற்றி பெங்களூருக்கு

டி வில்லியர்ஸ் அதிரடி… சோஹல் மாய பந்து வீச்சு! முதல் வெற்றி பெங்களூருக்கு

ஐபிஎல் போட்டியின் மூன்றாம் ஆட்டம் அதிரடியாக இருந்தது. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத். நேற்று டாப் தமிழ் நியூஸ் கட்டுரையில்  பெங்களூரு அணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கனித்தோம். அதுவே நடந்திருக்கிறது.

டி வில்லியர்ஸ் அதிரடி… சோஹல் மாய பந்து வீச்சு! முதல் வெற்றி பெங்களூருக்கு
PC: Royal Challengers Bangalore twitter page

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டார். கிரிக்கெட்டில் முன்னணி அணியான ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் பின்சுடன் ஓப்பனிங் இறங்கிய தேவ்தத் படிக்கல்லைக் கண்டதும் பலருக்கும் ஆச்சர்யம். ஏனெனில், படிக்கல்லுக்கு இதுவே முதல் போட்டி. ஆனால், அறிமுகப் போட்டியிலேயே தான் யார் என்று காட்டினார் படிக்கல்.

டி வில்லியர்ஸ் அதிரடி… சோஹல் மாய பந்து வீச்சு! முதல் வெற்றி பெங்களூருக்கு
PC: Royal Challengers Bangalore twitter page

42 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். இதில் 8 ஃபோர்களும் அடக்கம். ஆரோன் பின்ச் 29, கேப்டன் விராட் கோலி 14, என குறைவான ரன்களில் ஆட்டமிழக்க, டி வில்லியர்ஸ் அதிரடி காட்டினார். 30 பந்துகளில் 51 ரன்களை விளாசினார்.  அதனால், அணியின் ஸ்கோர் 163 ஆக உயர்ந்தது.

டி வில்லியர்ஸ் அதிரடி… சோஹல் மாய பந்து வீச்சு! முதல் வெற்றி பெங்களூருக்கு
PC: Royal Challengers Bangalore twitter page

ஹைதராபாத் பவுலிங்கில் தங்கராசு நடராஜன், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

டி வில்லியர்ஸ் அதிரடி… சோஹல் மாய பந்து வீச்சு! முதல் வெற்றி பெங்களூருக்கு

164 எனும் இலக்கு ஐபிஎல் போட்டிகளில் பெரிய ஸ்கோர் அல்ல. அதனால், ஹைதராபாத் அணிக்கு வெற்றி இருப்பதாகவே கருதப்பட்டது. அதற்கேற்ற வாறே ஒப்பனிங் இறங்கிய பேர்ட்ஸோ 43 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார். ஆனால், அவரைத் தவிர என்று பார்த்தால் மனிஷ் பாண்டே 34 ரன்களும், பியாம் கார்க்12 ரன்களும் எடுத்தனர். கேப்டன் டேவிட் வார்னர் உட்பட மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்ட வில்லை. அணியில் மூன்று பேர் டக் அவுட்.

டி வில்லியர்ஸ் அதிரடி… சோஹல் மாய பந்து வீச்சு! முதல் வெற்றி பெங்களூருக்கு

ஹைதராபாத் அணியை இப்படிச் சின்னாபின்னமாக்கியது சோஹல் வீசிய மாய பந்துவீச்சுதான். 4 ஓவர் வீசிய சோஹல் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைப் பறித்தார். அதுவும் மிக முக்கியமான பேட்ஸ்மேன்களான பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர் ஆகியோரை வீழ்த்தினார். நவ்திப் சைனி, ஷிவம் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டேய்ன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டி வில்லியர்ஸ் அதிரடி… சோஹல் மாய பந்து வீச்சு! முதல் வெற்றி பெங்களூருக்கு

ஹைதராபாத் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போட்டி முடிய 2 பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில் 10 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. டேவிட் வார்னர் மற்றும் விஜய் ஷங்கர் நிலைத்து ஆடியிருந்தால் வெற்றியை நோக்கிச் சென்றிருக்கலாம்.

பவுலர்களின் சுழல் வீச்சு பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2020 –ன் முதல் வெற்றியை ருசிக்க வைத்தது.