#IPL2021: ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறிய பெங்களூரு அணி

 

#IPL2021: ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறிய பெங்களூரு அணி

ஐபிஎல் தொடரின் 16வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதுவரை பெங்களூரு அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்தது , ராஜஸ்தான் அணியியோ தான் விளையாடிய 3 போட்டிகளில் , 1 வெற்றி, 2 தோல்விகளை பெற்றிருந்தது.

Image

டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் ஒரே ஒரு மாற்றமாக ரஜத் படிடர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் கடந்த 2 போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜெய்தேவ் உனட்கட் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் சேர்க்கப்பட்டார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் மனன் வோரா களமிறங்கினர். பெங்களூரு அணியின் முகமது சிராஜ் மற்றும் ஜெமிசன் ஆகியோர் ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பத்திலே குடைச்சல் கொடுத்தனர். பட்லர் 8 ரன்களிலும்,மனன் வோரா 7 ரன்களிலும், மில்லர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனும் 21 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி தத்தளித்தது. இதன் பின் வந்த ராஜஸ்தான் வீரர்கள் ஓரளவு பொறுப்புடன் ஆடி ராஜஸ்தான் அணி நல்ல இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். சிவம் டுபே 46 ரன்களும்,ராகுல் தவாட்டியா 40 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Image

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. கேப்டன் கோலி நிதானமாக ஆட படித்தல் அதிரடியாக ஆடினார். படிக்கல் 27 பந்துகளில் 100 கோடி 34 பந்துகளில் தங்களது அரைச் சதங்களை கடந்தனர். கோலி தனது அரைசதத்தை கடந்தவுடன் தனது குழந்தைக்கு முத்தமிடுவது போல் சைகை காட்டி தன் மகள் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தினார். மேலும் அசத்திய படிகள் ஐபிஎல் – ல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.16.2 ஓவர் முடிவில் பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. படிக்கல் 101 ரன்களுடனும் கோலி 72 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது.