ஐபிஎல்: 2 சூப்பர் ஓவர் மூலம் மும்பை இந்தியன்ஸை தோற்கடித்த பஞ்சாப் அணி!

 

ஐபிஎல்: 2 சூப்பர் ஓவர் மூலம் மும்பை இந்தியன்ஸை தோற்கடித்த பஞ்சாப் அணி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் 36வது ஆட்டத்தில் , ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மட்டும் குவின்டன் டி காக் களம் இறங்கினர்.ஆரம்பமே அதிர்ச்சியாக, மும்பை அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு டி காக் மற்றும் குருணல் பாண்டியா ஜோடி சேர்ந்தனர்.குருணல் 34 ரன்களிலும் மற்றும் குவின்டன் டி காக் 53 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய பொல்லார்ட் 34 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்: 2 சூப்பர் ஓவர் மூலம் மும்பை இந்தியன்ஸை தோற்கடித்த பஞ்சாப் அணி!

பிறகு பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 11 , ரன்களிலும் பிறகு வந்த கெயில் மற்றும் பூரன் தலா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தனி ஒரு ஆளாக போராடிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் 77 ரன்களை அடித்து ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 8 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. தீபக் ஹூடா 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் சமமான ரன்களை எடுத்ததால் இரண்டாவது முறையும் சூப்பர் ஓவர் வந்தது. அதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது