#IPL2021 : கொல்கத்தாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

 

#IPL2021 : கொல்கத்தாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே பொறுமையாக ஆடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டையும் இழந்தது. ராணா 22 ரன்களும் , திரிபாதி 36 ரன்களும் , தினேஷ் கார்த்திக் 25 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது.ராஜஸ்தான் தரப்பில் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டை கைப்பற்றினார்.

Image

134 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர் 5 ரன்களும் , ஜெய்ஸ்வால் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு புறம் கேப்டன் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று ஆட, மற்றொருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டும் வீழ்ந்துகொண்டே இருந்தது.

இதன்பிறகு டேவிட் மில்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். சாம்சன் 42 ரன்களுடனும், மில்லர் 24 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.18.5 ஓவரில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது இந்த தொடரில் ராஜஸ்தான் அணி பெற்ற இரண்டாவது வெற்றியாகும். இதன் மூலம் ராஜஸ்தான் அணி, புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.