IPL2021: பஞ்சாப்பை வீழ்த்திய கொல்கத்தா!

 

IPL2021: பஞ்சாப்பை வீழ்த்திய கொல்கத்தா!

ஐபிஎல் தொடரில் 21வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஃபேபியன் ஆலன் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டார். கொல்கத்தா அணியை பொறுத்தவரை மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

IPL2021: பஞ்சாப்பை வீழ்த்திய கொல்கத்தா!

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ராகுல் 19 ரன்களிலும் அகர்வால் 31 ரன்களிலும் ஆட்டம் இழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டுமா என்ற நிலையில் இருந்தபோது அந்த அணியின் கிறிஸ் ஜோர்டன் 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 30 ரன்கள் எடுத்து கௌரவமான இலக்கை எட்ட உதவினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பிரதீஷ் கிருஷ்ணா 3 விக்கெட்களையும்,பேட் கம்மின்ஸ் மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

124 என்ற எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. நிதிஷ் ராணா மற்றும் சுனில் நரேன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேற,சுப்மன் கில்லும் 9 ரன்னில் வெளியேறினார். இதன்பின் திரிபாதி மற்றும் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல , திரிபாதி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அதிரடி மன்னன் ரசல் 10 ரன்னில் ரன் அவுட் ஆனார்.16.4 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் மோர்கன் 47 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.