#IPL2021: தனி ஒருவனாக நின்று சென்னையை வெற்றிப்பெற வைத்த ஜடேஜா!

 

#IPL2021: தனி ஒருவனாக நின்று சென்னையை வெற்றிப்பெற வைத்த ஜடேஜா!

ஐபிஎல் தொடரின் 19வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.

#IPL2021: தனி ஒருவனாக நின்று சென்னையை வெற்றிப்பெற வைத்த ஜடேஜா!


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பாப் டு ப்ளஸிஸ் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். பவர் பிளேயில் சிறப்பாக ஆடிய சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை குவித்தது. நிதானமாக ஆடிய ருதுராஜ் 33 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய பாப் டு ப்ளஸிஸ் 40 பந்துகளில் அரைசதம் கடந்தார்.ரெய்னா தனது பங்குக்கு 3 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே பாப் டு ப்ளஸிஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார் இந்த இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்ஷல் படேல் கைப்பற்றினார். இதன்பின் அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தனர்.19 ஓவரில் 154 என சென்னை தடுமாறிக் கொண்டிருந்தபோது ஹர்ஷல் படேலின் ஓவரில் ஜடேஜா 5 சிக்ஸ்சர் உட்பட 37 ரன்களை குவிக்க ஆட்டம் சென்னை பக்கம் வந்தது. அதிரடியாக ஆடிய ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

Image


192 என்ற கடின இலக்குடன் துவங்கிய பெங்களூர் அணி , பவர்பிளேயில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் குவித்தது. கோலி 8 ரன்களிலும் , கடந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த படிகல் 15 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தரை 7 ரன்களிலும்,அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 22 ரன்களிலும் காலி செய்தார் ஜடேஜா. மேலும் பீல்டிங்கில் அசத்திய ஜடேஜா டேனியல் கிறிஸ்டின்யை ரன் அவுட் செய்தார்.அடுத்து அபாயகரமான ஏபி டிவில்லியர்ஸ் 4 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றினார் ஜடேஜா.20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 69ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இதுவரை தோல்வியே அடையாமல் இருந்த பெங்களூர் அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றது. இதன் மூலம் சென்னை அணி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.