ஐபிஎல் போட்டியில் கொரோனா விதிமீறல்!

 

ஐபிஎல் போட்டியில் கொரோனா விதிமீறல்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் போது, ராஜஸ்தான் அணி வீரர் உத்தப்பா பிசிசிஐ விதித்திருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2020 ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக பல கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபுஅமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில், கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எச்சம் மூலம் கொரோனா தொற்று பரவும் என்பதால் போட்டியின் போது வீரர்கள் பந்துகளில் எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது சுனில் நரைன் கேட்ச்சை தவறி விட்ட ராஜஸ்தான் வீரர் உத்தப்பா, பின்னர் பந்தை எடுத்து அதில் எச்சில் தடவினார். செப்டம்பர் 29ம் தேதி ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது டெல்லி வீரர் அமித் மிஸ்ரா பந்தில் எச்சில் தடவிய நிலையில், தற்போது ராஜஸ்தான் அணி வீரர் உத்தப்பா பிசிசிஐ விதித்திருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.