ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி

 

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 40வது ஆட்டத்தில் , ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற வார்னர் முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். ராஜஸ்தான் அணியிலிருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். சுமாரான துவக்கம் தந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30 சேர்த்தது. ராபின் உத்தப்பா 19 ரன்களில் ரன் அவுட் ஆனார். பிறகு ஸ்டோக்ஸ் 30 ரன்களிலும் சஞ்சு சம்சன் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜாப்ரா ஆர்ச்சர் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

Image

155 என்ற இலக்குடன் களமிறங்கிய வார்னர் 4 ரன்களிலும் மற்றும் பேர்ஸ்டோ 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு மணிஷ் பாண்டே மற்றும் தமிழக வீரர் விஜய் சங்கர் ஜோடி களமிறங்கியது. விஜய் சங்கர் நிதானமாக ஆட மணிஷ் பாண்டேவும், விஜய் சங்கரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். மணிஷ் பாண்டே 83 ரன்களும், விஜய் சங்கர் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். 18.1 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டில் வீழ்த்தியது. இதன்மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறி, ப்ளே ஆப் கனவை தக்க வைத்துள்ளது. தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்துக்கு பின் தங்கியது.