பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

 

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபில் 13வது சீசனில் இன்று வாழ்வா ? சாவா? என்ற போராட்டத்தை எதிர்கொள்ளவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. அபுதாபியில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை காண சென்னை அணி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். காரணம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று தோற்கும் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் செல்வதுடன் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பும் குறையும்.

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இதுவரை சென்னை அணி ஆடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை மோதியுள்ள நிலையில் சென்னை அணி 14 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.