“திமுகவை காலி செய்ய நினைக்கும் ஐபேக் …”புலம்பும் ம.செ.க்கள்!

 

“திமுகவை காலி செய்ய நினைக்கும்  ஐபேக் …”புலம்பும் ம.செ.க்கள்!

திமுக வெற்றிக்கு அடித்தளமிட ரூ.350 கோடி கொடுத்து வரவழைக்கப்பட்டது தான் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். ஐபேக் நிறுவனம் தற்போது திமுகவின் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொகுதிவாரியான கருத்துகணிப்பு உள்ளிட்ட பணிகளை திமுகவுக்கு பின்புறமிருந்து சத்தமில்லாமல் செய்து வருகின்றது ஐபேக். அதேசமயம் ஐபேக் நிறுவனத்தின் மீது திமுகவில் மாவட்ட செயலாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதாவது கட்சி விஷயங்களில் தலையிடுவதுடன் , அவர்களின் அதிகார தோரணை திமுக மாவட்ட செயலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

“திமுகவை காலி செய்ய நினைக்கும்  ஐபேக் …”புலம்பும் ம.செ.க்கள்!

இதை மறைந்த எம்எல்ஏ அன்பழகன் திமுக தலைமையிடம் முன்பே சொன்னதாகவும், அதை ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் விட்டதால் அதிகாரத் தோரணை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் திமுக நிர்வாகிகள் கவலை தெரிவித்துவருகின்றனர். பிரதமர் மோடி , ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என பல்வேறு தலைவர்களை தேர்தலில் வெற்றி பெற வைத்த பெருமை பிரஷாந்த் கிஷோரையே சாரும். அதே சமயம் தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழித்துகட்ட 2016 ஆம் ஆண்டிலேயே பாஜக திட்டம் வகுத்தது. அதன் விளைவு தான் கமல் ஹாசன், முக அழகிரி, சசிகலா, டிடிவி தினகரன், அர்ஜுன மூர்த்தி, சரத்குமார் என ஒவ்வொருவரும் திமுக – அதிமுகவுக்கு மாற்றாக தனித்து களம் காண வந்தது.

“திமுகவை காலி செய்ய நினைக்கும்  ஐபேக் …”புலம்பும் ம.செ.க்கள்!

புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸை குதிரை பேரத்தின் மூலம் தட்டிப்பறித்த பாஜக தமிழகத்திலும் அதே பாணியை செய்துவிடலாம் என முடிவெடுத்துள்ளது. இதற்கு ஐபேக் நிறுவனம் பின்புறத்திலிருந்து ஆதரவு தெரிவிப்பதாக திமுக மாவட்ட செயலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

“திமுகவை காலி செய்ய நினைக்கும்  ஐபேக் …”புலம்பும் ம.செ.க்கள்!

குறிப்பாக உத்தேச வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், ஐபேக் நிறுவன ஊழியர்களை கவர் கொடுத்து சில திமுகவினரே விலைக்கு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக வெற்றி பல குளறுபடியால் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு செல்வதாகவும் கட்சி நிர்வாகிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். திமுகவை காலி செய்ய நினைக்கும் பிஜேபிக்கு ஐபேக் ஆதரவு தருவதாகவும். கட்சியில் இருந்து கொண்டே சிலர் கட்சிக்கு துரோகம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கட்சித் தலைமை ஐபேக் விவகாரத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் புலம்பி வருகிறார்கள்.