கூகுள் அசிஸ்டெண்டிடம் ரகசியமாக பேசும் வசதி அறிமுகம்!

 

கூகுள் அசிஸ்டெண்டிடம் ரகசியமாக பேசும் வசதி அறிமுகம்!

குரல் வழி தேடலுக்கு பயன்படுத்தப்படும் கூகுள் அசிஸ்டெண்டிடம் ரகசியமாக பேசும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கூகுள் அசிஸ்டெண்டிடம் ரகசியமாக பேசும் வசதி அறிமுகம்!

கூகுள் தேடு பொறி, யுடியுப் உள்ளிட்ட செயலிகளில், ஒரு விஷயத்தை டைப்பிங் செய்து தேடுவதை தவிர்த்து, குரல் மூலமாக தேடும் வசதிக்காக கூகுள் அசிஸ்டெண்ட் என்ற வசதி ஆண்டிராய்டில் இருக்கிறது. இதன் மூலம் நமக்கு தேவையான விஷயத்தை அசிஸ்டெண்டிடன் கூறினால் அது நமக்காக தேடி தரும். உதாரணமாக நமக்கு தேவையான வீடியோவை யுடியூப்பில் தேட கூறி அசிஸ்டெண்டை பணித்தால், அது நமக்காக வீடியோவை தேடித்தரும்.

இத்தைகய தேடல்கள் எல்லாம் நமது கூகுள் அக்கவுண்டில் சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் அடிக்கடி தேடப்படும் விஷயம் தொடர்பான வீடியோக்களை ரெக்கமண்ட் பகுதியில் காட்டும். இந்நிலையில், அசிஸ்டெண்டிடம் ரகசியமாக பேசும் பிரைவேட் வாய்ஸ் செர்ச் வசதியை ”கெஸ்ட் மோட்” என்ற பெயரில் கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது.

கூகுள் அசிஸ்டெண்டிடம் ரகசியமாக பேசும் வசதி அறிமுகம்!

இந்த வசதியை ஆக்டிவேட் செய்து பயன்படுத்தும்போது, தேடப்படும் எந்த ஒரு தேடல் பதிவும், கூகுள் அக்கவுண்டில் பதிவாகாது என்றும் இதனால் ரகசியமாக தேட வேண்டிய அல்லது தங்களது தேடல்கள் குறித்து யாருக்கும் தெரியாமல் பிரைவசி காப்பதற்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் வலைதளத்தில் உறுதிப்படுத்துள்ள கூகுள் நிறுவனம், இதன் மூலம் வாடிக்கையாளர்களின் பிரைவசி பாதுகாப்பது தொடர்பான கூடுதல் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கூகுள் அசிஸ்டெண்ட்டிடம் குரல் வழியாக தேட கூறிய வார்த்தை பதிவுகளை அழிக்கும் வசதி கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் அசிஸ்டெண்டிடம் ரகசியமாக பேசும் வசதி அறிமுகம்!
  • எஸ். முத்துக்குமார்