சாம்சங் கேலக்ஸி எஃப் 41 போன் அறிமுகம் 16ம் தேதி முதல் பிளிப்கார்டில் விற்பனை

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 போன் அறிமுகம் 16ம் தேதி முதல் பிளிப்கார்டில் விற்பனை

கேலக்ஸி எஃப்41 என்ற புதிய போனை அறிமுகப்படுத்தி உள்ள சாம்சங், பிளிப்கார்டில் வரும் 16ம் தேதி தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் திருவிழாவில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 போன் அறிமுகம் 16ம் தேதி முதல் பிளிப்கார்டில் விற்பனை

சாம்சங்கின் எஃப் தொடர் வரிசையில் முதல் போனான இதில் 6.4 இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் திரை, ஆண்டிராய்ட் 10 இயங்குதளம், 6000எம் ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மட்டுமின்றி 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜருடன் இந்த ஃபோன் வருகிறது. கேமராவை பொறுத்தவரை பின்புறத்தில் 64 எம்பி, 8 எம்பி மற்றும் 5 எம்பி என 3 கேமரா செட்டப்பும், முன்புறத்தில் 32 எம்பி செல்ஃபி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விலை 6ஜிபி ரேம் -64 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ. 16,999க்கும், 8ஜிபி ரேம் – 128 ஜிபி மெமரி மாடல் விலை 17,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 41 போன் அறிமுகம் 16ம் தேதி முதல் பிளிப்கார்டில் விற்பனை

இந்நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இந்த போனுக்கு அறிமுக சலுகையாக, 1500 ரூபாய் வரை தள்ளுபடி வழங்க சாம்சங் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இதன் தொடக்க விலை 15,499 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்