வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள கிட் அறிமுகம்!

 

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள கிட் அறிமுகம்!

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள கிட் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமெடுக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.76 லட்சம் பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,874 பேர் உயிரிழந்த கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,87,122ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 2,57,72,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் கொரோனா பரிசோதனையை நிறுத்தக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள கிட் அறிமுகம்!

இந்நிலையில் வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கிட்டிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ரேப்பிட் ஆன்டிஜன் முறையின் மூலம் உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். அதில் உங்களுக்கு பாசிட்டிவ் என்று நீங்கள் மீண்டும் பரிசோதனை செய்ய தேவையில்லை. கொரோனா அறிகுறிகள் இருந்தும் நெகடிவ் என முடிவு வந்தால், நீங்கள் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய வேண்டும்.

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள கிட் அறிமுகம்!

CoviSelfTM, Covid-19 OTC Antigen LF ஆகிய ரேப்பிட் சோதனை கருவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதை கொண்டு நீங்கள் வீடுகளிலேயே பரிசோதனை செய்து கொள்ளலாம். அத்துடன் கூகுள் ப்ளே ஸ்டோரில் தனியாகச் செயலிகளும் உள்ளன. வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்து அதற்கான முடிவுகளை புகைப்படங்களாக எடுத்து இதில் சேமித்து கொள்ளலாம். இந்த புகைப்படங்களும் சோதனை முடிவுகளும் ஐசிஎம்ஆர் சர்வர்களில் பாதுகாப்பாகஇருக்கும்.