அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்!ஃபேஸ்புக் அதிரடி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்!ஃபேஸ்புக் அதிரடி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கண்ணாடி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக பிரபல ரே பேன் கண்ணாடிகளை தயாரிக்கும் எஸ்ஸிலார் லக்ஸோடிக்கா நிறுவனத்துடன் பேஸ்புக் கூட்டு சேர்ந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்!ஃபேஸ்புக் அதிரடி அறிவிப்பு

இந்த ஸ்மார்ட் கண்ணாடி குறித்த எந்த தகவலையும் பேஸ்புக் வெளியிட வில்லை. எனினும், இது ஏஆர் எனப்படும் ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஸ்ம்மார்ட் கிளாஸாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. ரே பேன் பிராண்டில் இந்த ஏஆர் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகப்படுத்தப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.

ஏஆர் கண்ணாடியானது வழக்கமான கண்ணாடி போல ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். இதனால் எதிரே உள்ள காட்சிகளை நீங்கள் பார்க்கலாம் என்பதுடன், அந்த கண்ணாடி டிஜிட்டல் திரையாகவும் செயல்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட சில காட்சிகளையும் அதன் திரையில் பார்க்க முடியும் என்கிறார்கள்.

அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்!ஃபேஸ்புக் அதிரடி அறிவிப்பு

ஏஆர் கண்ணாடியானது வழக்கமான கண்ணாடி போல ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். இதனால் எதிரே உள்ள காட்சிகளை நீங்கள் பார்க்கலாம் என்பதுடன், அந்த கண்ணாடி டிஜிட்டல் திரையாகவும் செயல்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட சில காட்சிகளையும் அதன் திரையில் பார்க்க முடியும் என்கிறார்கள்.

இத்தகைய ஏஆர் கண்ணாடி தயாரிப்பு தொடர்பாக பேஸ்புக் நிறுவனம், ஆரியா என்ற ஆய்வு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏஆர் தொழில்நுட்பத்திலான கண்ணாடி உருவாக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் விட ஒரு படி கடந்து இந்த புதிய ஸ்மார்ட் கண்ணாடி இருக்கும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அணிகலன் தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த நினைக்கும் பேஸ்புக், அந்த கண்ணாடியின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விலை குறித்து ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். முத்துக்குமார்