டெல்லியில் வலுக்கும் போராட்டம் : இணையதள சேவை துண்டிப்பு!

 

டெல்லியில் வலுக்கும் போராட்டம் : இணையதள சேவை துண்டிப்பு!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வலுப்பெற்றிருப்பதால் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 லட்சம் விவசாயிகள் டிராக்டர்களில் இன்று பேரணியை தொடங்கினர். குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு டெல்லிக்குள் நுழைய போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போதே விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்ததால் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுக்க முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இது பெரும் கலவரத்திற்கு வித்திட்டது.

டெல்லியில் வலுக்கும் போராட்டம் : இணையதள சேவை துண்டிப்பு!

தடையை மீறி செங்கோட்டைக்குள் நுழைந்து விவசாயிகள் போராடி வரும் அதே வேளையில், தாறுமாறாக டிராக்டர்களை ஓட்டி சிலர் கலவரத்தை உண்டு செய்து வருகிறார்கள். இதற்கும் விவசாயிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிய கிசான் சங்கம் அறிவித்துள்ளது. இதன் புன்புலத்தில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் தான் டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வலுக்கும் போராட்டம் : இணையதள சேவை துண்டிப்பு!

இந்த நிலையில், போராட்டம் தீவிரம் அடைவதை தடுக்கும் வகையில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதியிலும் டெல்லியில் எல்லைப் பகுதிகளிலும் இணையதள சேவை நிறுத்தப்பட்டிருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை இணையதள சேவை தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.