மகளிர் தினம்- ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு விருது

 
ஒரு ரூபாய் இட்லி  பாட்டி

பெண்கள் அமைப்பினர் நடத்திய மகளிர் தினவிழா நிகழ்ச்சியில் Women Power 2023 என்ற விருது கோவையை சேர்ந்த  ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வழங்கப்பட்டது.

விறகு அடுப்பிலிருந்து எல்பிஜி கேஸ் அடுப்புக்கு மாற்றம்: ஒரு ரூபாய் இட்லி  கமலாத்தாள் பாட்டிக்கு குவியும் உதவிகள் | From firewood to LPG connection,  this ...

கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில்   சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளீர் தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 'கோயமுத்தூர் உமன் பவர் 2023' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி, மருத்துவம், சமூக சேவை, மகளிர் மேம்பாடு, அழகு கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட சுமார் 18 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்கின்ற இட்லி பாட்டி கமலாத்தாள் அவர்களுக்கு Women Power 2023 என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் . மகளிர் தங்களது வாழ்க்கையில் சாதிக்க பெரும் ஊக்கமாக விளங்கி வருகின்ற இட்லி பாட்டி கமலாத்தாள், பவர் விமன் என்றால் அது மிகை அல்ல . கமலாத்தாள் பாட்டி ரசிகர்கள் அவருடன் ஃபோட்டோ எடுத்து சென்றனர் .

கமலாத்தாளுக்கு உதவ முன்வந்த ஆனந்த் மகிந்த்ரா, அன்னயர் தினத்தன்று, சிறப்பு சமையலறை வசதியுடன் கூடிய வீட்டை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது. விலைவாசி உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து வரும் இந்த காலத்திலும், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் இட்லி பாட்டிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக யூடியூபர்கள் கோவை சென்றால் இவரை விசிட் அடிக்காமல் விடமாட்டார்கள். தான் இருக்கும்வரை இட்லி வியாபாரத்தை செய்வேன் என்றும், கடைசி வரை ரூ.1-க்கு தான் இட்லி விற்பேன் என்றும் கமலாத்தாள் பாட்டி கூறுகிறார்.