சென்னையில் இன்று முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம்!

 

சென்னையில் இன்று முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 17 ஆம் தேதி நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பல தளர்வுகள் செய்யப்பட்டன. அதன் படி தமிழகத்திலும் தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நேற்று விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் தினமும் 25 உள்நாட்டு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று முதல் சென்னையில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம்!

இன்று காலை 9:25 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து மொத்தம் 40 விமானங்கள் வருவதற்கும், அங்கிருந்து புறப்பாட்டிற்கும் இயக்கப்பட உள்ளது. இதனிடையே இன்று அதிகாலை 5:05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அந்தமான் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது இயக்கப்பட்டு வரும் இந்த விமானங்கள் சிறப்பு விமானங்கள் இல்லை என்றும் வழக்கமாக இயக்கப்படும் விமானங்கள் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.