மத்திய அரசின் திடீர் அறிவிப்பு : அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

 

மத்திய அரசின் திடீர் அறிவிப்பு :  அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திடீர் அறிவிப்பு :  அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

ஏப்ரல் 1-ம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1% லிருந்து 6.4%ஆகவும், ஒராண்டுக்கான வைப்பு தொகை வட்டி விகிதம் 5.5% லிருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4% லிருந்து 6.5 % ஆகவும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். 2020-2021 கடைசி காலாண்டில் இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பி வருங்கால வைப்பு நிதி, ஓராண்டு கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி குறைப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.