தாம்பத்யம், உடலுறவு… வேறுபாடுகள் அறிவோம்!

 

தாம்பத்யம், உடலுறவு… வேறுபாடுகள் அறிவோம்!

தாம்பத்யம், உடலுறவு… இது இரண்டும் ஒன்றா, வெவ்வேறா என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். ஆணும் பெண்ணும் ஒருமனப்பட்டு விரும்பி இணைவது தாம்பத்யம். அதாவது, கணவன் மனைவி உறவு. இது தாம்பத்யம் எனப்படும். ஒரு ஆணும் பெண்ணும் வெறும் உடலால் மட்டும் இணைதல் உடலுறவு. இந்தவகையில் தாம்பத்யத்துக்கும் உடலுறவுக்கும் வித்தியாசம் இருப்பதை உணரலாம்.

தாம்பத்யம், உடலுறவு… வேறுபாடுகள் அறிவோம்!
ஹேவிங் செக்ஸ்:
ஆங்கிலத்தில் `இன்டர்கோர்ஸ்’ என்பது பொதுச்சொல். இதுதவிர இரு உடல் இணையும் உறவை `லவ் மேக்கிங்’ மற்றும் `ஹேவிங் செக்ஸ்’ என இரு சொல்லாடலில் கூறுவர். இதை நாம் தமிழில் தாம்பத்யம் மற்றும் உடலுறவு என எடுத்துக் கொள்ளலாம். மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டிலும் வெறும் வாக்கிய, வார்த்தை வேற்றுமையை மட்டுமே நாம் உணர முடியும். ஆனால், சற்று உற்று நோக்கினால், அதனுள் மனம், உணர்ச்சி சார்ந்த விஷயங்கள் புதைந்திருப்பதை அறிய முடியும்.

அப்படி என்ன இந்த இரண்டுக்கும் மத்தியில் வேற்றுமை இருந்துவிடப் போகிறது என சிலர் எண்ணலாம். ஒருவேளை இதை படித்து முடித்த பிறகு, தாம்பத்யத்தில் ஈடுபடவும் உடலுறவில் ஈடுபடவும் என்ன வித்தியாசம் என பிரித்தறியும் நிலை உங்களுக்குப் பிறக்கலாம். சூழல் அமைந்து வரும்போது இணைவது தாம்பத்யம். அது காதலின் வழியே கூடுதல். சூழலை அமைத்துக் கொண்டு கூடுதல் உடலுறவு, இச்சையின் வழியே கூடுதல் இது.

தாம்பத்யம், உடலுறவு… வேறுபாடுகள் அறிவோம்!
தழுவல், பிரிதல்:
ஒரு அழகான மாலை நேரம், தூரலில் நனைந்து வந்த பொழுதில் உடல் சிலிர்ப்பு காந்தமாய் ஈருடலை இணைக்கச் செய்வதாக இல்லாமல் வெற்றி, மகிழ்ச்சி, சோகம் என பல்வேறு உணர்ச்சி சூழலின் வெளிப்பாடாக அமையலாம், இது தாம்பத்யம். இருவர் கட்டித் தழுவுதலை கண்டு, இச்சை காட்சிகள் காண்பித்து, உடலை வருடி உரசி, தேகம் எனும் சதையைப் பிசைந்து சூழலை செயற்கையாக உண்டாக்கி இணையும் அனைத்துமே உடலுறவு தான்.

மனதின் வழியே இணைந்து பிறகு கூடுதல் தாம்பத்யம். உடலின் வழியாக மட்டும் கூடிப் பிரிவது உடலுறவு. ஏதோ ஒரு உணர்ச்சி மனதை பிணையச் செய்து, அதன் பால் கட்டிலில் ஆரத்தழுவி உடல் இணைவதுதான் தாம்பத்யம். சிற்றின்ப காரணத்துக்காக உடலை மட்டுமே இணைத்துக் கொள்வதன் பெயரே உடலுறவு.

தாம்பத்யம், உடலுறவு… வேறுபாடுகள் அறிவோம்!ஒற்றைக் காட்சி:
காதலின் வழியே இணைவது தாம்பத்யம், இச்சையின் வழியாக இணைவது உடலுறவு. ஒரு காட்சியில் தொடங்கி, பிறகு இணைந்து அடுத்த காட்சிக்கு நகர்வது தாம்பத்யம். உடல் இணைதல் மட்டுமே காட்சியாக அமைவது உடலுறவு. ஒரு சூழல் / காட்சி ஆண், பெண் மனதை இணைத்து, அதன் பால் நகர்ந்த சில காதல் காட்சிகளுக்கு பிறகு கூடுதல் தாம்பத்யம். உடல் கூடுவதை மட்டுமே காட்சியின் ஆரம்பம் மற்றும் முடிவாக கொண்ட ஒற்றைக் காட்சி உடலுறவு. ஈருடல் இணைந்து பிணைய ஒரு ஆசை வரும், அது முடிந்தவுடன் ஆடை அணிந்து நகர்வது வெறும் உடலுறவே!

பேசி மகிழ்ந்து, கூடி குலவிய பிறகு மீண்டும் பேசி மகிழ்தல் தாம்பத்யம். முடிவில் காதல் அடுத்த நிலைக்கு உயர்ந்திருந்தால்… மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிருந்தால், பாரமற்ற நிலையால் இரு உடல் நிலத்தில் மிதந்திருந்தால்…. அது தாம்பத்யம். எப்படியோ அனுபவித்தாயிற்று… அடுத்த வாய்ப்பு எப்போதோ, சூழல் எப்போது அமையுமோ என்ற எண்ணம் எள்ளளவு மனதை சூழ்ந்திருந்தாலும் அது வெறும் உடலுறவே.

திருமணமான பலரும் உடலுறவில் மட்டுமே ஈடுபட்டு வரலாம்… திருமணம் செய்யாத காதலர் கூட தாம்பத்யத்தில் ஈடுபட்டு வரலாம்.
மனதால் இணைதல் தாம்பத்யம், உடலால் இணைதல் உடலுறவு.