7.5% உள் ஒதுக்கீடு: மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்!

 

7.5% உள் ஒதுக்கீடு:  மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்!

நடப்பாண்டு மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு அமல்படுத்தவிருப்பதால், மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக் கனியாக இருப்பதால், மருத்துவ படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 45 நாட்களுக்கு மேலாக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். அதனால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

7.5% உள் ஒதுக்கீடு:  மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்!

இதனையடுத்து விரைந்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பலர் ஆளுநரிடம் வலியுறுத்தியதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதனால், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவித்திருந்தார்.

7.5% உள் ஒதுக்கீடு:  மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்!

இந்த நிலையில், உள் ஒதுக்கீடு நாடப்பாண்டே அமல்படுத்தப்பட உள்ளதால் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இனி வரும் காலங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு கிடைக்கும் என்பதால், நீட் பயிற்சி மையத்தில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.