பூந்தமல்லியில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

 

பூந்தமல்லியில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

சென்னை

பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிவர் புயல் காரணமாக, சென்னை பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்துகொண்டது.

பூந்தமல்லியில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

மேலும், சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில், மழை குறைந்ததை அடுத்து சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை, நகராட்சி ஊழியர்கள் ராட்சத மோட்டார் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சாலைகளில் முறிந்து கிடக்கும் மரங்களையும் வாகனம் மூலம் அப்புறப்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.