வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான இட ஒதுக்கீட்டை கடந்த 2 மாதங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்தார். இதனை தொட்ர்ந்து வன்னியர்கள் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது தான் என்றும் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பிறகு வன்னியர் இட ஒதுக்கீடு இறுதியாகும் எனவும் தகவல் வெளியானது. ஆனால் சட்டப்பேரவையில் நிறைவேற்றுப்பட்டுவிட்டதால் இச்சட்டம் நிரந்தரமான சட்டம் தான், தற்காலிகமானது இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னிய சமூகத்துக்கு10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது இந்த ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற உயர்கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு.பிறப்பித்துள்ளார்.