இன்ஸ்டாகிராமால் கோடியில் புரளும் பிரபலங்கள்

 

இன்ஸ்டாகிராமால் கோடியில் புரளும் பிரபலங்கள்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கிடைக்கும் வருமானம் குறித்த தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமால் கோடியில் புரளும் பிரபலங்கள்

இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலை Hopper HQ என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டினோ ரொனால்டோ முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டுவைன் டக்ளஸ் ஜான்சன் 11.38 கோடி ரூபாயும், மூன்றாவது இடத்தில் இருக்கும் பாப் பாடகர் அரியானா கிராண்டே 11.28 கோடி ரூபாயும் வருமானமாகப் பெறுகிறார்

இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ வெளியிடும் ஸ்பான்ஸர் பதிவு ஒன்றுக்கு 12கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். 19ஆவது இடத்தை பிடித்துள்ள விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கிட்டதட்ட 5கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை 132 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். அதேபோல 27ஆவது இடத்தை பிடித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிடும் ஒரு ஸ்பான்சர் போஸ்டுக்கு 3 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.