இன்ஸ்டாகிராம் செயலியும் சரிவர செயல்படாததால் பயனாளர்கள் அதிருப்தி!

 

இன்ஸ்டாகிராம் செயலியும் சரிவர செயல்படாததால் பயனாளர்கள் அதிருப்தி!

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் செயலி சரிவர செயல்படாததால் பயனாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

உலகம் முழுவதுமுள்ள இன்றைய இளசுகள் அதிகளவில் பயன்படுத்தும் சமூக வலைதள பக்கங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இதில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சில 2k கிட்ஸ்கள் ஊரடங்கு நேரத்திலிருந்து கல்லூரி இல்லாததால் இன்ஸ்டாகிராமேலேயே மூழ்கி கிடக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் செயலியும் சரிவர செயல்படாததால் பயனாளர்கள் அதிருப்தி!

இந்நிலையில் பல்வேறு பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலி சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செயலியை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் சரியாக செயல்படவில்லை என்றும், குறிப்பாக நியூஸ் ஃபீட்களை பார்க்க முடியவில்லை என்றும் பயனர்கள் ட்விட்டரில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.

முன்னதாக கடந்த வாரம் ஒருநாள் உலகம் முழுவதும் ஜிமெயில் யூடியூப், கூகுள் மேப், கூகுள் பே, உள்ளிட்ட கூகுளின் செயலிகள் செயல்படாமல் முடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.