சாத்தான்குள விவகாரம்: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

 

சாத்தான்குள விவகாரம்: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சாத்தான்குள விவாகரத்தில் சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததால், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்களை சாத்தான்குள காவல்நிலைய காவலர்கள், கொடூரமாக அடித்து கொலை செய்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குள விவகாரம்: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

பிறகு, இந்த கொலை வழக்கு சிபிஐ இடம் மாறிய நிலையில், கைதான காவலர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனிடையே சிறையில் இருக்கும் காவலர்கள் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால், போலீசார் தாக்கியதால் தான் ஜெயராஜும் பென்னிக்ஸும் உயிரிழந்ததால் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என சிபிஐ ஜாமீன் வழங்க விடாமல் தடுத்து வருகிறது.

சாத்தான்குள விவகாரம்: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

இந்த நிலையில், ஜாமீன் கோரி சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாரதிதாசன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.