சூரப்பா மீதான விசாரணை : இறுதி முடிவு எடுக்கத் தடை!

 

சூரப்பா மீதான விசாரணை : இறுதி முடிவு எடுக்கத் தடை!

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.ரூ.280 கோடி ஊழல் புகார்கள் எழுந்தது. தகுதியில்லாதவர்கள் பணி நியமனம், கல்லூரிக்கு வாங்கிய பொருட்களில் முறைகேடு என சூரப்பாவுக்கு எதிராக புகார்கள் குவிந்தன. சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டதிலிருந்தே அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டது மோதலை வலுக்கச் செய்தது.

சூரப்பா மீதான விசாரணை : இறுதி முடிவு எடுக்கத் தடை!

இதையடுத்து, சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சூரப்பா, தன் மீது எந்த தவறுமில்லை என வாதிட்டார். சூரப்பாவுக்கு ஆதரவளித்த ஆளுநர் பன்வாரிலால், அரசின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என அரசிடம் தெரிவித்தார். இதனிடையே, சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கலையரசன் குழு தெரிவித்திருந்தது.

சூரப்பா மீதான விசாரணை : இறுதி முடிவு எடுக்கத் தடை!

இந்த நிலையில், நீதிபதி கலையரசன் ஆணையத்திற்கு தடை விதிக்கக்கோரி சூரப்பா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆணைய அறிக்கை பற்றிய இறுதி முடிவை ஆளுநரே எடுப்பார் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர். மேலும், விசாரணை ஆணைய அறிக்கை பற்றி மார்ச் 15க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.