சூரப்பா மீதான விசாரணை : கலையரசன் குழுவுக்கு அவகாசம்!

 

சூரப்பா மீதான விசாரணை : கலையரசன் குழுவுக்கு அவகாசம்!

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூர்ப்பாவுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. அரசுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்த சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார்கள் எழுந்தது. இதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது. இதற்கு சூரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். தன் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்தார்.

சூரப்பா மீதான விசாரணை : கலையரசன் குழுவுக்கு அவகாசம்!

சூரப்பா மீதான புகாரை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்தது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கவனத்துக்கு எட்டியது. சூரப்பாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று தெரிவித்த ஆளுநர், விசாரணையை முடித்துக் கொள்ளுமாறு முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் இருப்பதாக கலையரசன் குழு தெரிவித்தது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க கலையரசன் குழுவுக்கு உயர்கல்வித்துறை 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் பணிகளும் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.