குக்கரில் நூதன முறையில் ஆவி பிடித்த துப்புரவு தொழிலாளர்கள்… ஈரோடு மாநகராட்சி அசத்தல்!

 

குக்கரில் நூதன முறையில் ஆவி பிடித்த துப்புரவு தொழிலாளர்கள்… ஈரோடு மாநகராட்சி அசத்தல்!

ஈரோடு

ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, குக்கரில் நூதன முறையில் ஆவி பிடிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நாள்தோறும் கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பிற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குக்கரில் நூதன முறையில் ஆவி பிடித்த துப்புரவு தொழிலாளர்கள்… ஈரோடு மாநகராட்சி அசத்தல்!

இதன் ஒரு பகுதியாக, துப்புரவு பணியாளர்களுக்கு நாள்தோறும் ஆவி பிடிக்க முடிவு செய்த மாநகராட்சி நிர்வாகம் இதற்காக புதிய முறை ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளனர். இந்த முறையின்படி, ஸ்டவ் அடுப்பு மீது குக்கரை வைத்து, அதன் மேல் பகுதியில் சுமார் 5 அடி நீளத்திற்கு குழாய் அமைத்து, முன் பகுதியில் குனல் வழியாக தொழிலாளர்கள் ஆவி பிடித்தனர்.

குக்கரில் வேப்ப இலை, நொச்சி இற்லை, மூலிகை தைலம் போன்றவற்றை போட்டு அடுப்பில் வேக வைத்து, அதன் மூலம் நீராவி பிடிப்பதால் நோய் கிருமிகள் அழியும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகேயுள்ள மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மூன்றாம் மண்டலத்துக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நீராவி பிடித்து சென்றனர்.