தமிழகத்தில் தாமரையை மலர செய்த 4 பேருக்கு இன்னோவா கார் பரிசு : எல்.முருகன் அறிவிப்பு!

 

தமிழகத்தில் தாமரையை மலர செய்த 4 பேருக்கு இன்னோவா கார் பரிசு : எல்.முருகன் அறிவிப்பு!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவைக்கு நுழைகிறார்கள்.

தமிழகத்தில் தாமரையை மலர செய்த 4 பேருக்கு இன்னோவா கார் பரிசு : எல்.முருகன் அறிவிப்பு!

இந்நிலையில் 4 பாஜக எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்குள் அனுப்பிய மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு இடம் இல்லை என்றனர், தமிழகம் , புதுச்சேரியில் பாஜக வளர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தாமரையை மலர செய்த 4 பேருக்கு இன்னோவா கார் பரிசு : எல்.முருகன் அறிவிப்பு!

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் மத்தியில் காணொளி மூலம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து பாஜக எம்எல்ஏ சட்டப்பேரவைக்கு செல்கிறாரோ, அந்த மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அந்த வகையில் தற்போது நான்கு பாஜக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் நான்கு மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசாக அளிக்கப்படவுள்ளது.