நாங்களும் கெத்துதான்… டிசம்பர் காலாண்டில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ்…

நாங்களும் கெத்துதான்… டிசம்பர் காலாண்டில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ்…

2020 டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.5,215 கோடி ஈட்டியுள்ளது.

நம் நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.5,215 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 16.8 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,466 கோடி ஈட்டியிருந்தது.

நாங்களும் கெத்துதான்… டிசம்பர் காலாண்டில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ்…
இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.25,927 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 12.3 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் முந்தைய (2019) செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிட்டால் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 5.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

நாங்களும் கெத்துதான்… டிசம்பர் காலாண்டில் லாபத்தை அள்ளிய இன்போசிஸ்…
இன்போசிஸ்

கடந்த 2020 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் இன்போசிஸ் நிறுவன பங்கின் விலை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் 2020ம் ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) இன்போசிஸ் பங்கின் விலை 71.8 சதவீதம் உயர்ந்துள்ளது.