கோடீஸ்வரர்கள் நிறைந்த இன்போசிஸ் நிறுவனம்… கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்தது

கோடீஸ்வரர்கள் நிறைந்த இன்போசிஸ் நிறுவனம்… கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்தது

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் விளங்குகிறது. இந்நிறுவனம் அண்மையில் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் வாயிலாக பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின்படி, 2019-20ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது.

கோடீஸ்வரர்கள் நிறைந்த இன்போசிஸ் நிறுவனம்… கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்தது

இந்த கோடீஸ்வர பணியாளர்களில் பெரும்பகுதியினர் துணை தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் அளவிலான பணியாளர்கள். 2018-19ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் கோடீஸ்வர ஊழியர்கள் எண்ணிக்கை 64ஆக இருந்தது. முன்னர் வழங்கப்பட்ட மற்றும் அந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பங்கு சலுகைகளின் துல்லியமான அதிகரிப்பு காரணமாக, முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2019-20ம் நிதியாண்டில் இந்த பணியாளர்களின் காம்பென்சேஷனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கோடீஸ்வரர்கள் நிறைந்த இன்போசிஸ் நிறுவனம்… கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்தது

2019-20ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்களின் சராசரி ஊதியம் 10 சதவீதம் அதிகரித்து ரூ.6.8 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் நம் நாட்டில் பணியாளர்களின் சராசரி ஆண்டு சம்பள உயர்வு 7.3 சதவீதம்தான். இன்போசிஸ் தலைவர் நந்தன் நீல்கேனி பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், உண்மையான சோதனை வரும் மாதங்களில் வருகிறது. புதிய இயல்பின் படிப்படியாக வளர்ந்து வரும் இயக்கவியலை புரிந்து கொண்டு பதிலளிப்பதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். தொழில்நுட்பம் இங்கே ஒரு நட்பை நிரூபிக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.