கொரானா தடுப்பூசியை பத்தி பேசினாலே கடுப்பாகரிங்களா ? இதை படிங்க..

 

கொரானா தடுப்பூசியை பத்தி பேசினாலே கடுப்பாகரிங்களா ? இதை படிங்க..

இந்தியாவின் சிறந்த மருத்துவ நிபுணர்களான  டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் மற்றும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி ஆகியோர்  கொரானா தடுப்பூசி பற்றிய சில கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள் .

கொரானா தடுப்பூசியை பத்தி பேசினாலே கடுப்பாகரிங்களா ? இதை படிங்க..

கேள்வி 1:. முதல் டோஸுக்கு  பிறகும் சிலர் இறந்து போகிறார்கள், அல்லது கொரானாவால் பாதிக்கப்படுகின்றனரே ஏன் ?.

பேராசிரியர் ஸ்ரீநாத் ரெட்டி: தடுப்பூசியின் நோக்கம் வைரஸ்  தாக்குவதையும்  ,இறப்பையும்  தடுப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வாரங்களுக்குள் உருவாகத் தொடங்குகிறது, . பூஸ்டர் டோஸ் எனப்படும் இரண்டாவது டோஸுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான், வைரசை  எதிர்கொள்ளக்கூடிய  நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் .அதற்குள்  ஒரு சில நபர்களுக்கு லேசான தொற்று  ஏற்படலாம்.

கோவிட் -19  முதல் டோஸுக்குப் பிறகும் மாஸ்க் அணியவேண்டும்., மேலும் கை கழுவுதல், சமூக இடைவெளி  மற்றும் கூட்டத்தைத் தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்

டாக்டர் ராஜீவ் ஜெயதேவன்:  உடலில்  நோய் எதிர்ப்பு சக்தி, இரண்டாவது டோஸுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு முழுமையாக உருவாகிறது. எனவே, அதை அடைவதற்கு முன்பு மக்கள் நோய்வாய்ப்படலாம்.

கேள்வி 2. : இரண்டு டோஸ் போட்ட பிறகு ,கோவிட் -19 தொற்றாது  என்று அர்த்தமா?

பேராசிரியர் ஸ்ரீநாத் ரெட்டி: இல்லை.  ஆனால் சிலருக்கு இது ஒரு லேசான நோயாக வெளிப்படும் அல்லது அறிகுறியற்றதாகவே இருக்கும். நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கான ஆபத்து வெகுவாகக் குறைக்கப்படும்.

டாக்டர் ராஜீவ் ஜெயதேவன்: முழு தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னரும், லேசான நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும், அதனால்தான் தொற்றுநோய்விதிகளை கடைப்பிடிக்க   மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கேள்வி 3:.  தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், முகமூடி அணிய வேண்டுமா?

பேராசிரியர் ஸ்ரீநாத் ரெட்டி: ஆம்.  நீங்கள் முகமூடி அணியாவிட்டால், வைரஸ் உங்களை (லேசான அல்லது அறிகுறிகளுடன் கூட) பாதிக்கக்கூடும். மேலும் ,  நீங்கள் வைரஸை மற்றவர்களுக்கு பரப்பும் அபாயம் இருக்கும். எனவே, உங்களுக்கு தொற்று ஏற்படுவதையும் மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்க நீங்கள் முகமூடியை அணிய வேண்டும்.

கேள்வி 4.: நோய் எதிர்ப்பு சக்தி உருவாக  எவ்வளவு காலம்  ஆகும்?

பேராசிரியர் ஸ்ரீநாத் ரெட்டி: தடுப்பூசி எடுத்த பல வாரங்களுக்கு பிறகு  நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. எனவே இரண்டாவது டோஸ் எடுத்த பிறகு, நோய் எதிர்ப்பு சக்தி உருவாக  இரண்டு வாரங்கள் காத்திருப்பது நல்லது.