மருத்துவமனை அலட்சியம்… கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட வட்டாட்சியர்!

 

மருத்துவமனை அலட்சியம்… கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட வட்டாட்சியர்!

கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் வட்டாட்சியர் வெங்கடேசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை எனக் கூறி டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய வெங்கடேசன், வட்டாட்சியராக இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால் பொது மக்களின் நிலை என்ன ஆகும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவமனை அலட்சியம்… கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட வட்டாட்சியர்!

வெங்கடேசன் வீட்டுக்கு சென்ற சில நாட்களிலேயே அவருக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெங்கடேசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கருப்பு பூஞ்சை நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெங்கடேசனின் உடல்நிலை குறித்து பேசிய அவரது மனைவி, அவருக்கு தாடையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும் உடல் நலம் தேறி வருவதாகவும் சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்படுவதால் அரசு உதவிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். அரசு மருத்துவமனை ஆரம்பத்திலேயே கொரோனாவுக்கு முறையாக சிகிச்சை அளித்திருந்தால் கருப்பு பூஞ்சை நோய் பாதித்திருக்காது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.