பழிக்குப் பழி… சீட்டுக்கட்டாய் சரிந்த இங்கி… மண்ணின் மைந்தன் அஸ்வின் சுழல் மாயஜாலம்!

 

பழிக்குப் பழி… சீட்டுக்கட்டாய் சரிந்த இங்கி… மண்ணின் மைந்தன் அஸ்வின் சுழல் மாயஜாலம்!

எப்படியாவது பழிக்குப் பழி வாங்கிவிட வேண்டும் என்ற திண்ணமான எண்ணத்திலேயே இந்திய அணி களமிறங்கியது. முதல் போட்டியில் ஜெயித்த உற்சாகத்தோடு இங்கிலாந்து களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே காட்டடி அடித்தார்.

Image

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அவர் டாப் கியரிலேயே ஆடிவந்தார். நான்காவது விக்கெட்டுக்கு ரஹானே-ரோஹித் இணை சிறப்பாக விளையாடி அணியை மீட்டது. 248 ரன்களுக்குப் பிறகு இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகினர். பண்ட்டின் அரைசதத்தால் இந்தியா 300 ரன்களைத் தாண்டியது. 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Image

நேற்று 300-6 என்ற நிலையில் இருந்த இந்திய அணி 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இது மைதானத்தின் தன்மை பவுலிங்குக்கு சாதகாமனதைக் காட்டியது. அதேபோல, இங்கிலாந்து வீரர்களும் வரிசையாக நடையைக் கட்டினர். அஸ்வினுக்கு இது சொந்த மைதானம் என்பதால் தன்னுடைய மாயஜாலத்தைக் காட்டினார்.

Image

ஒவ்வொருவரையும் சொல்லி சொல்லி விக்கெட் எடுத்தார். அஸ்வின் ஐந்து பேரை காலி செய்திருந்தாலும் அக்சர் படேல் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டாக கேப்டன் ரூட்டை எடுத்தது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பென் மட்டும் 42 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. 134 ரன்களுக்கு இங்கிலாந்து அவுட்டானதன் மூலம், இந்திய அணி 195 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.