4வது டெஸ்ட்- இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு

 

4வது டெஸ்ட்- இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.முதலில் ஆடிய இந்திய அணி இழந்து 191 ரன்களை எடுத்தது.இந்திய அணி தரப்பில் கோலி 50 ரன்களும்,தாகூர் 57 ரன்களும் எடுத்தனர்.இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

4வது டெஸ்ட்- இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு
ளை

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 290 ரன்களை குவித்தது.இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஓலி பாப் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.இதன் பிறகு தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய முடிவில் 92 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டிய முடிக்கப்பட்டது.ரோஹித் 127 ரன்னும் , புஜாரா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் ஜடேஜா 17 ரன்களிலும்,அடுத்து வந்த ரகானே ரன் ஏதும் எடுக்காமலும் ஏமாற்றினார்.நிதானமாக ஆடி வந்த கோலி 44 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.இதன் பிறகு பன்ட் மற்றும் தாகூர் ஜோடி சேர்த்தனர்.இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நொறுக்கி எடுத்தனர்.
அதிரடியாக ஆடி 65 பந்தில் அரைசதம் அடித்த தாகூர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இந்திய அணி 148.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணிக்கு இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது.ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹமீது இருவரும் இன்று விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது.