குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

 

குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமையவுள்ள தொழிற்சாலைக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் வர்த்தக சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட பழைய கரூர்சாலையில் உள்ள குஜிலியம்பாறை பகுதியில் தமிழக அரசின் பெரிய தொழிற்பேட்டை அமையவுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், இதற்காக முயற்சி எடுத்த வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி. பரமசிவத்திற்கும் நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளனர்.

குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

அதில், “திண்டுக்கல் நகரத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள அரசின் பெரிய தொழிற்பேட்டை அப்பகுதி வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தமிழக அரசின் மீது முழு நம்பிக்கையையும் ஆர்வத்தையும் உண்டாக்குகிறது. இதனை எங்களது திண்டுக்கல் வாத்தகர்கள் சங்கத்தின் சார்பாக முழுமனதுடன் வரவேற்கிறோம் .

புதிதாக அமைய உள்ள தொழிற்பேட்டை பகுதியை சுற்றி சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவிற்கு வறட்சி பகுதியாக உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த நல்ல திட்டம் நல்ல முறையில் நிறைவேறினால் அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பு பெருகி பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

மேலும் இத்திட்டத்திற்கு உண்டான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் புதிதாக அமைய உள்ள தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் துவங்குவதற்கு திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்கள் அதிக அளவில் ஆர்வமுடன் உள்ளார்கள். மேலும் இத்திட்டம் நிறைவேற அப்பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார்கள். அப்பகுதியில் அகல ரயில் பாதை அமைந்துள்ளதால் சரக்கு போக்குவரத்திற்கும் வசதியாக இருக்கும் இத்திட்டத்தினால் அடுத்து வரும் தலைமுறை பட்டதாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும், இதனால் அப்பகுதி மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழகமே வளர்ச்சி அடையும் சூழ்நிலை உருவாகும். எனவே இத்திட்டம் விரைவில் நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வர் ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

முன்னதாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கரூர் எம்.பி. ஜோதிமணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலருடன் நேரில் வந்து மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது