இந்தியாவின் தூய்மை நகரம் இந்தூர்… சென்னை எத்தனையாவது இடம் தெரியுமா?

 

இந்தியாவின் தூய்மை நகரம் இந்தூர்… சென்னை எத்தனையாவது இடம் தெரியுமா?

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு துறை சார்பாக வெளியிட்டிருக்கும் தூய்மை நகரங்களின் பட்டியலில் பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன.

தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் (எஸ்பிஎம்யு) திட்டத்தின் கீழ் நிலைத்த ஆதாயங்களைத் தூய்மை ஆய்வு வழங்கும். இந்தத் திட்டம் அனைத்து நகரங்களுக்கும் இடையே முழுவதும் தூய்மை என்ற கருத்தின் அடிப்படையில் விரிவான வழிகாட்டுதல்களை அளிக்கிறது.

தூய்மை , ஆரோக்கியம், அதிகாரமளித்தல், முன்னேற்றம், தன்னிறைவு உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் இந்த அமைச்சகம் இந்தியாவின் தூய்மை நகரத்தைத் தேர்ந்தெடுக்கிறது.

இந்தியாவின் தூய்மை நகரம் இந்தூர்… சென்னை எத்தனையாவது இடம் தெரியுமா?

அமைச்சகம்  நடத்திய ஆய்வின் அடிப்படையில் வழங்கப்படும் தூய்மை ஆய்வு விருதுகள் 2020 தேர்வில்  இந்தியாவின் மிகத்தூய்மையான நகரம் என்ற பட்டத்தை இந்தூர் வென்றது.

சூரத், நவி மும்பை ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை (ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் பிரிவில்) வென்றன.

100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகமான பிரிவில் இந்தியாவிலேயே தூய்மையான மாநிலம் என்ற விருதை சத்தீஷ்கர் தட்டிச் சென்றது.  100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறைவான  பிரிவில் ஜார்க்கண்ட் முதலிடம்  பிடித்தது.

அதெல்லாம் சரி, தமிழக நகரங்கள் ஏதேனும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்ததா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. முதல் மூன்று இடங்களில் இல்லை எனில், முதல் பத்து இடங்களில் இருக்கும் எனத் தேடினால், அங்கும் இல்லை. சரி, முதல் இருபது இடங்களில்… ம்ஹீம்… அதிலும் இல்லை. அப்படியெனில், சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்தியாவின் தூய்மை நகரம் இந்தூர்… சென்னை எத்தனையாவது இடம் தெரியுமா?

45 வது இடம். மொத்த நகரங்களின் எண்ணிக்கையே 47 தான். ஆக, கடைசியிலிருந்து மூன்றாம் இடம்தான் சென்னைக்கு கிடைத்திருக்கிறது.