கொரோனா வைரஸால் பாதிப்பில்லை… தினமும் ஆன்லைனில் 5 கார்களை விற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்

கொரோனா வைரஸால் பாதிப்பில்லை… தினமும் ஆன்லைனில் 5 கார்களை விற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நம் நாட்டில் கடந்த ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களில் தினமும் சராசரியாக 5 கார்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளது.

நம் நாட்டின் மிகப்பெரிய சொகுசு கார் விற்பனை நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது ஆன்லைனில் கார் விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதால் ஆன்லைன் கார் விற்பனையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. அதற்கு நல்ல பலனும் கிடைக்க தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிப்பில்லை… தினமும் ஆன்லைனில் 5 கார்களை விற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்
மெர்சிடிஸ் பென்ஸ் கார்

கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாத காலத்தில் ஆன்லைனில் வாயிலாக சுமார் 500க்கும் மேற்பட்ட கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை செய்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 5 பென்ஸ் கார்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் விற்பனையான கார்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யப்பட்டது, எஞ்சிய வாடிக்கையாளர்கள் ஷோரூம் வந்து கார்களை எடுத்து சென்றனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளளது.

கொரோனா வைரஸால் பாதிப்பில்லை… தினமும் ஆன்லைனில் 5 கார்களை விற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்
மெர்சிடிஸ் பென்ஸ் கார்

தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மொத்த கார் விற்பனையில் ஆன்லைன் பங்கு 15 சதவீதமாக உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் சந்தோஷ் ஐயர் கூறுகையில், சிறிய நகரங்களிலிருந்து வாடிக்கையாளர்களை அணுக இந்த மாடல் (ஆன்லைன் விற்பனை) நிறுவனத்துக்கு பெரிதும் உதவுகிறது என தெரிவித்தார்.