மனசு இறங்கிய மத்திய அரசு.. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை

 

மனசு இறங்கிய மத்திய அரசு.. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க அதன் மீதான வரிகளை குறைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை செய்ய தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த 10 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளத. இதனால் நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு விட்டது. நாட்டின் ஒரு சில இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது. கச்சா எண்ணெய் விலை தாண்டி விட்டது என்பது ஒரு புறம் இருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 60 சதவீதம் வரிகளாக உள்ளது. அதாவது உதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 என்றால் அதில் வரிகள் 60 ரூபாயும் அடங்கும். எரிபொருளின் அடக்க விலையை காட்டிலும் அதன் மீதான வரிகள் அதிகமாக இருப்பது விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

மனசு இறங்கிய மத்திய அரசு.. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை
பெட்ரோல் பங்கு

பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான அரசு கடந்த 12 மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை இரு முறை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனசு இறங்கிய மத்திய அரசு.. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரிகள் கூறுகையில், மத்திய நிதியமைச்சகம் இப்போது சில மாநிலங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்துடன் வரிகளை குறைப்பது தொடர்பாக கலந்தாலோசிக்க தொடங்கியுள்ளது. விலைகளை நிலையாக வைத்திருக்கக்கூடிய வழிகளை நாங்கள் விவாதித்து வருகிறோம். மார்ச் மத்தியில் இந்த விஷயத்தை நாங்கள் கவனிக்க முடியும். வரிகளை குறைப்பதற்கு முன் விலைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஏனெனில் வரி கட்டமைப்பை மீண்டும் மாற்றுவதை அரசு விரும்பவில்லை என தெரிவித்தனர்.