லாக்டவுனால் ரெஸ்ட் எடுத்த வாகனங்கள்.. 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூனில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது

லாக்டவுனால் ரெஸ்ட் எடுத்த வாகனங்கள்.. 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூனில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது

லாக்டவுன் காரணமாக பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்ததால், நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூனில் குறைந்துள்ளது.

நம் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் 3வது பெரிய நாடு இந்தியா. மேலும் ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து நம் நாடுதான் அதிகளவில் கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்கிறது.

லாக்டவுனால் ரெஸ்ட் எடுத்த வாகனங்கள்.. 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூனில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது
பெட்ரோல் பங்கு

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்கள் லாக்டவுனை அமல்படுத்தின. இதனால் பொதுபோக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் பயன்பாடு வெகுவாக குறைந்தது. மேலும் கையிருப்பு அதிகமாக இருந்ததால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்தன. இதனால் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்ற ஜூன் மாதத்தில் நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.

லாக்டவுனால் ரெஸ்ட் எடுத்த வாகனங்கள்.. 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூனில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது
கச்சா எண்ணெய்

வர்த்தக வட்டாரங்கள் அளித்த தகவல்களின்படி, கடந்த ஜூன் மாதத்தில் தினசரி கச்சா எண்ணெய் இறக்குமதி 39 லட்சம் பேரல்களாக குறைந்துள்ளது. இது கடந்த மே மாதத்தை காட்டிலும் 7 சதவீதம் குறைவாகும். அதேசமயம் 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதம் ஈராக்கிலிருந்து அதிகளவு கச்சா எண்ணெய்யை நம் நாடு அதிகம் இறக்குமதி செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா (2), ஐக்கிய அரபு அமீரகம் (3), நைஜீரியா (4) மற்றும் அமெரிக்கா (5) ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு அதிகம் கச்சா எண்ணெய் சப்ளை செய்துள்ளன.