முக்கிய 8 துறைகள் உற்பத்தி.. 2021 ஏப்ரல் மாதத்தில் 56 சதவீதம் வளர்ச்சி

 

முக்கிய 8 துறைகள் உற்பத்தி.. 2021 ஏப்ரல் மாதத்தில் 56 சதவீதம் வளர்ச்சி

2021 ஏப்ரல் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 56 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

முக்கிய 8 துறைகள் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவையாகும். 2021 ஏப்ரல் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 56 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு 2020 ஏப்ரல் மாதத்தில் லாக்டவுன் காரணமாக அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைவாகவே இருந்ததே காரணம்.

முக்கிய 8 துறைகள் உற்பத்தி.. 2021 ஏப்ரல் மாதத்தில் 56 சதவீதம் வளர்ச்சி
நிலக்கரி

2021 மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 11.4 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக கடந்த மாதம் பல மாநிலங்களில் லாக்டவுன் அமலில் இருந்தது. இதனால் 2021 மே மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய 8 துறைகள் உற்பத்தி.. 2021 ஏப்ரல் மாதத்தில் 56 சதவீதம் வளர்ச்சி
தொழிற்சாலை

கடந்த ஏப்ரல் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் வளர்ச்சி கண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.