இந்திய அணி அசத்தலான வெற்றி! காரணம் இவர் ஒருவர்தான்! #IndVsAus

 

இந்திய அணி அசத்தலான வெற்றி! காரணம் இவர் ஒருவர்தான்! #IndVsAus

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அற்புதமான வெற்றியை ருசித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது. அவற்றைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி அசத்தலான வெற்றி! காரணம் இவர் ஒருவர்தான்! #IndVsAus

முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடி தோற்றது இந்திய கிரிக்கெட் அணி. கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பிவிட்டார். ரஹானே தலைமையிலான இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இரண்டாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸ்லில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை மட்டுமே எடுத்தது. பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளைப் பறித்தார்கள். அறிமுக பவுலர் சிராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இந்திய அணி அசத்தலான வெற்றி! காரணம் இவர் ஒருவர்தான்! #IndVsAus

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் 326 ரன்கள் குவித்தனர். கேப்டன் ரஹானே 112 ரன்கள் குவித்தார். ஆல்ரவுண்டர் ஜடேஜா 57 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில்ல் லயன், மிட்சேல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளைப் பறித்தார்கள்.

இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக 200 ரன்கள் குவித்தனர். க்ரீன் 45, வேட் 40 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் சிராஜ் 3, ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

எளிதான வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி வீரர்கள் ஆடினார்கள். இந்த முறையும் மயங் அகர்வால் சொதப்பி 5 ரன்களோடு ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 3 ரன்களோடு திரும்பினார். சுப்னம் கில் 35, ரஹானே 27 ரன்கள் என ஆட்டமிழக்காமல் 70 ரன்களை அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளனர்.

இந்திய அணி அசத்தலான வெற்றி! காரணம் இவர் ஒருவர்தான்! #IndVsAus

இந்த வெற்றிக்கு ஒரே காரணம், கேப்டன் ரஹானே என்று அடித்துச் சொல்லலாம். கேப்டன் ரஹானே தன் பொறுப்புணர்ந்து சவாலன தம் பணியை எந்தக் குறையும் இல்லாமல் செய்து வருகிறார். குறிப்பாக, சிராஜ் மற்றும் அஸ்வினை சூழலுக்கு ஏற்ப பந்து வீச அழைத்த வியூகத்தைச் சொல்லலாம். அதேநேரம், நடுவர்களின் தவறான தீர்ப்புகளுக்கு எதிராக கோபத்துடன் குரல் கொடுக்கவும் தயங்க வில்லை.

மேலும் அவர் அடித்த சதம்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம். இல்லையெனில் ஆஸ்திரேலிய அணியைப் போலவே இந்திய அணியும் ஸ்கோரில் சொதப்பியிருக்கும்.

கேப்டன் ரஹானே அசத்தலான வெற்றியை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார். இதனால், இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா 1:1 எனும் கணக்கில் சம நிலையில் இருக்கின்றன.