ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி – சுந்தர் பிச்சை வாழ்த்து

 

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி – சுந்தர் பிச்சை வாழ்த்து

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இதை கிரிக்கெட் ரசிகர்களே கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன்108 ரன்கள் அடித்தார். இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸில் வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும் தாக்கூர் 67 ரன்களையும் விளாசினர். இந்திய அணி 10 விக்கெட் விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி – சுந்தர் பிச்சை வாழ்த்து

ஆஸ்திரேலிய அணியை இரண்டாம் இன்னிங்க்ஸில் 294 ரன்களுக்குள் சுருட்டினர் இந்திய பவுலர்கள். முகம்மது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

328 எடுத்தால் வெற்றி எனுல் இலக்கோடு ஆடியது இந்திய அணி. முன்னணி வீரர்கள் சொதப்பினாலும், கில், ரிஷப் பண்ட் அணியின் வெற்றியை எளிதாக்கினார்கள். ஆனாலும் கடைசி நேரம் வரை பரபரப்பு அதிகரித்தது.

இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்தியா – ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 2:1 எனும் கணக்கில் இந்திய தொடரையும் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி – சுந்தர் பிச்சை வாழ்த்து

இந்திய அணியின் வெற்றிக்கு சுந்தர் பிச்சை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மிகச் சிறப்பான டெஸ்ட் தொடர் இது என பாராட்டியுள்ளார்.

அதேபோல பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு இரு தமிழர்கள் முக்கிய காரணமாக விளங்குகிறார்கள். முதல் இன்னிங்ஸில் தமிழகத்தின் நடராஜன் மற்று வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் அசத்தலாக ஆடி 62 ரன்கள் விளாசினார். இரண்டாம் இன்னிங்கிஸில் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு குறைவான நேரத்தில்22 ரன்கள் அடித்து வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தார்.