தனியார்மயமாகும் இந்தியன் ரயில்வே! தகுதியுடைய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்…

 

தனியார்மயமாகும் இந்தியன் ரயில்வே! தகுதியுடைய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்…

பயணிகள் ரயில்களை இயக்க கூடிய தகுதியுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை ரயில்வே அமைச்சகம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய ரயிலவே, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 109 இணை பாதைகளில் 151 அதிநவீன ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகள் அறிமுகம், குறைவான பயண நேரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், மேம்பட்ட பாதுகாப்பு, உலகத் தரம் வாய்ந்த சேவைகள் கிடைக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் கட்டமைப்பு வசதிகளை தனியார் பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக வெளிப்படையான கொள்கை நடைமுறை உருவாக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

தனியார்மயமாகும் இந்தியன் ரயில்வே! தகுதியுடைய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்…

இதற்கிடையே ரயில் சேவைகளை தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏழைகளுக்கு உகந்த ஒரே போக்குவரத்து ஆதாரமாக ரயில்கள் திகழ்வதாகவும் ஏழைகளிடமிருந்து எதையெல்லாம் பறிக்க முடியுமோ அதையெல்லாம் பறிக்கும் செயலில் அரசு இறங்கியிருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதற்கெல்லாம் ஏழை மக்கள் நிச்சயம் பதிலடி தருவார்கள் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.