இந்தியன் ஆயில் நிறுவனம்; முதல் காலாண்டில் வருவாய் சென்ற ஆண்டை விட ரொம்பக் குறைவு  

 

இந்தியன் ஆயில் நிறுவனம்; முதல் காலாண்டில் வருவாய் சென்ற ஆண்டை விட ரொம்பக் குறைவு  

நிதியாண்டு என்பது ஒரு வருடத்தின் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையான காலமாகும். இதன் முதல் காலாண்டி என்பது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களை வரவு செலவுகளைக் குறிப்பிடுவது.

தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் தனது முதல் காலாண்டு வருவாய் பற்றித் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம்; முதல் காலாண்டில் வருவாய் சென்ற ஆண்டை விட ரொம்பக் குறைவு  

2020- 2021 நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இயக்க வருவாய் 88,937 கோடி ரூபாய் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.2019 -2020 நிதியாண்டில் இதே காலத்தில் இது 1,50,137 கோடி ரூபாயாக இருந்தது.

30 ஜூன் 2020 அன்றுடன் முடிவடைந்த காலத்தில், நிகர லாபம் 1911 கோடி ரூபாய். சென்ற நிதியாண்டின் இதே காலத்தைய நிகர லாபம் 3596 கோடி ரூபாய் நடப்பு காலத்தில், முக்கியமாக சரக்கு இழப்பின் காரணமாகவே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம்; முதல் காலாண்டில் வருவாய் சென்ற ஆண்டை விட ரொம்பக் குறைவு  

இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எஸ். எம். வைத்யா,  ’2020 -2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி உட்பட இந்தியன் ஆயில் நிறுவனம் 16.504 மில்லியன் டன் பொருள்களை விற்பனை செய்துள்ளது. 2020- 2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் சுத்திகரிப்பு உற்பத்தி 12.930 மில்லியன் டன். நாடு முழுவதும் உள்ள குழாய் இணைப்பு கட்டமைப்பு மூலமாக இதே காலத்தில் 15.017 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது.

மொத்த சுத்திகரிப்பு மார்ஜின் (ஜி ஆர் எம்) 2020- 2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒரு பிபிஎல்லுக்கு 1.98 டாலராக இருந்தது. சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் இது ஒரு பிபிஎல் லுக்கு 4.69 டாலராக இருந்தது. சரக்கு லாபம்/ நஷ்டம் ஈடு செய்யப்பட்ட பிறகு, நடப்புகாலத்தில் அடிப்படை ஜி ஆர் எம் ஒரு பிபிஎல் லுக்கு 4.27 டாலராக உள்ளது’ என்று கூறியுள்ளார்.