அரையிறதியில் இந்திய அணி! 41 ஆண்டுகளுக்கு பின் புதிய சாதனை

 

அரையிறதியில் இந்திய அணி! 41 ஆண்டுகளுக்கு பின் புதிய சாதனை

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Image

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஆடவர் ஹாக்கியில் மொத்தமுள்ள 3 லீக் போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றதையடுத்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற 4வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பான் நாட்டு அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில் இந்திய அணி 5 – 3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில், பிரிட்டனுடன் களம்கண்ட இந்திய அணி, பிரிட்டனை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கடைசியாக 1984 ஒலிம்பிக்கில் இந்தியா 5 வது இடம் பிடித்து இருந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு காங்கிரஸ் ம்.பி. ராகுல் காந்தி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.