“செல்போன் ஒட்டு கேட்பு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்காதது ஏன்?” – சந்தேகம் எழுப்பும் ப.சிதம்பரம்!

“செல்போன் ஒட்டு கேட்பு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்காதது ஏன்?” – சந்தேகம் எழுப்பும் ப.சிதம்பரம்!

இந்திய அரசியலில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதிக பாதுகாப்பு வாய்ந்த ஆப்பிள் போன்களில் கூட ஊடுருவி தகவல்களைத் திருடக்கூடிய, போன் கால்களை ஒட்டு கேட்கக் கூடிய பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலின் என்எஸ்ஓ என்ற ஸ்பைவேர் நிறுவனம். இந்நிறுவனத்துடன் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அரசுகள் வாடிக்கையாளர்களாக உள்ளன.

“செல்போன் ஒட்டு கேட்பு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்காதது ஏன்?” – சந்தேகம் எழுப்பும் ப.சிதம்பரம்!

ஆகவே இந்தியாவிலுள்ள பிரபலங்களின் போன் கால்களை ஒட்டு கேட்டதில் மத்திய அரசின் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. விளக்கமளிக்க வேண்டிய மத்திய அரசோ பெயருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு கமுக்கமாக இருக்கிறது. இவ்விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நேற்று நிருபர்களிடம் பேசியிருந்தார். பிரதமர் மோடி இதற்கு கட்டாயமாக விளக்கமளித்தே தீர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

“செல்போன் ஒட்டு கேட்பு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்காதது ஏன்?” – சந்தேகம் எழுப்பும் ப.சிதம்பரம்!

தற்போது ட்விட்டரிலும் பெகாசஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்வீட்டில், “பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இஸ்ரேல் பிரதமர் பென்னட்டை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பெகாசஸ் குறித்த முழு விவரங்களையும் கேட்டுள்ளார். பிரான்ஸில் பிரபலங்களின் செல்போன்கள் மற்றும் தன்னுடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாகவும் பேசியுள்ளார். அதற்கு பென்னட் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

ஆனால், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து கவலைப்படாத ஒரே அரசு இந்திய அரசு தான். ஒட்டுக்கேட்பு குறித்த முழுமையான தகவல்களையும் மத்திய அரசு அறிந்துள்ளதால், வேறு எந்தத் தகவலையும் இஸ்ரேலிடமோ, என்எஸ்ஓ நிறுவனத்திடமோ கேட்க வேண்டிய தேவையி்ல்லை என்று எண்ணுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.