சூடு பிடித்த பழைய கார்கள் விற்பனை.. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கார்கள் விற்பனையை நிறுத்தும் கார் தயாரிப்பு நிறுவனங்கள்

சூடு பிடித்த பழைய கார்கள் விற்பனை.. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கார்கள் விற்பனையை நிறுத்தும் கார் தயாரிப்பு நிறுவனங்கள்

ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வாகனங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான தொடக்க நிலை கார்கள் விற்பனையை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாட்டில் தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான தொடக்க நிலை கார் தயாரிப்பை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான தொடக்க நிலை அல்லது புதிய மினி கார்கள் விற்பனை சக்கை போடு போட்டது. எளிதான கடன் வசதி மற்றும் சிறந்த தொழில்நுட்பம் போன்றவற்றுக்காக இந்த கார்களுக்கு மக்களிடம் வரவேற்பு காணப்பட்டது. 2016ம் ஆண்டில் நம் நாட்டில் விற்பனையான மொத்த பயணிகள் வாகனத்தில் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான புதிய மினி கார்கள் 3ல் ஒரு பங்கினை கொண்டு இருந்தது. 2016ம் ஆண்டில் சுமார் 10 லட்சம் மினி கார்கள் (ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கார்கள்) விற்பனையாகி இருந்தது.

சூடு பிடித்த பழைய கார்கள் விற்பனை.. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கார்கள் விற்பனையை நிறுத்தும் கார் தயாரிப்பு நிறுவனங்கள்
தட்சன் கோ மாடல் கார்

ஆனால் தற்போது தொடக்க நிலை அல்லது குறைந்தவிலை மினி கார்களுக்கு தேவை குறைந்து வருகிறது. 2020ம் ஆண்டில் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான புதிய கார்கள் 4.16 லட்சம் மட்டுமே விற்பனையாகி இருந்தது. அந்த கார்களின் சந்தை பங்களிப்பு 17 சதவீதமாக குறைந்து விட்டது. அதேவேளையில், ரூ.5 லட்சத்துக்கும் குறைவான பழைய கார்கள் விற்பனை சூடு பிடித்து வருகிறது. இதனால் இந்திய கார் தயாரிப்பாளர்கள் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான மினி கார்கள் தயாரிப்பை முடிவுக்கு கொண்டு வரும் நிலைக்கு வந்து விட்டனர்.

சூடு பிடித்த பழைய கார்கள் விற்பனை.. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கார்கள் விற்பனையை நிறுத்தும் கார் தயாரிப்பு நிறுவனங்கள்
பழைய கார்கள்

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த டாடா நானோ மற்றும் ஹூண்டாய் இயான் மாடல்கள் நுகர்வோரின் ஆதரவு இழந்தததால், நிசான் மோட்டார் இந்தியா தனது தட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாருதி சுசுகி (ஆல்டோ), ரெனால்ட் (க்விட்) மற்றும் நிசான் (ரெடி-கோ) போன்ற முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களை தவிர்த்து மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் 5-10 லட்சம் ரூபாய் பிரிவு கார் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.