காஷ்மீர்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலி!

காஷ்மீர்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலி!
காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஓருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர் உயிர்த்தியாகம் செய்தார்.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃபிடினென்ட் கலோனல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், “ரஜோரி மாவட்டம் நவ்ஷோரா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஹவில்தார் சம்பூர் குர்ரங் படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்” என்றார்.


எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் வெற்று முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. தினமும் இப்படி உயிரிழப்புகள் தொடர்வதை தடுக்க எந்த உறுதியான நடவடிக்கையும் இல்லை என்பது வேதனையாக உள்ளது.

Most Popular

செவ்வாய் கிரகத்தின் விசித்திரங்கள் – நாசா வெளியிட்டிருக்கும் போட்டோக்கள்

விண்வெளி என்றைக்கும் ஆச்சர்யமும் சுவாரஸ்யமும் நிறைந்தது தான். மனிதர்கள், இயற்கையை ரசித்துகொண்டு மட்டுமே இல்லை. அதன் ரகசியம் அறிய ஏராளமான ஆய்வுகளும் செய்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது... அங்கு காற்று இருக்கிறதா... பூமி...

மருத்துவ படிப்பு ஒ.பி.சி இட ஒதுக்கீடு… இந்த ஆண்டே வழங்க தமிழக அரசு வழக்கு! – மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மருத்துவ மேல்நிலைப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நிலை...

“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம் -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்

டெல்லியில் உள்ள ரன்ஹோலாவில் விகாஸ் நகரில் விஷால், விததா மற்றும் அமித் அனைவரும் இர்பான் என்பவருடன் சேர்ந்து ஒரு போலி கால் சென்டர் நடத்தி 2.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது...

புதுச்சேரியில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், சட்டபேரவை...
Do NOT follow this link or you will be banned from the site!