லாடக் தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை.. இந்திய ராணுவம் விளக்கம்!

லாடக் தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை.. இந்திய ராணுவம் விளக்கம்!

கடந்த மாதம் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதல் நடத்திய லடாக் பகுதியில் இரு நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பேசிய மோடி, பிற நாட்டு படைகள் இந்திய ராணுவத்தை கண்டு அஞ்சுவதாகவும் திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் அவர்களது மன உறுதியை வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறினார். அதன் பிறகு தாக்குதலில் காயம் அடைந்த சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற அவர், வீரர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

லாடக் தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை.. இந்திய ராணுவம் விளக்கம்!

மேலும், அவர்கள் விரைந்து நலம் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த புகைப்படம் இணையத் தளத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில் மருத்துவ உபகரணங்கள் ஏதும் இல்லாததால், அங்கு ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

லாடக் தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை.. இந்திய ராணுவம் விளக்கம்!

அந்த அறிக்கையில், ஆயுதப்படை எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பது தொடர்பாக தவறான கருத்துக்கள் வெளியாவதாகவும் வீரர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நெருக்கடியான சூழலில் உருவாக்கப்பட்ட இந்த பகுதி பொது மருத்துவமனையின் ஒரு பகுதி என்றும் கொரோனாவால் ஆடியோ,வீடியோ ஹால் ஆகப்பயன்படுத்தப்பட்டு வந்த அரங்கம் சிகிச்சை பகுதியாக மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அதனால் காயம் அடைந்த வீரர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத் தளபதி உள்ளிட்டோர் அவர்களை பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.